பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட புளியக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செவிடன் காதில் சங்கு ஊதி எழுப்பும் நூதன போராட்டத்துக்கு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.