திருவையாறு பகுதியில் பலத்த மழை: வாழை மரங்கள் சாய்ந்தன
By DIN | Published On : 09th July 2021 12:51 AM | Last Updated : 09th July 2021 12:51 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழைப் பொழிந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):
திருவையாறு 59 மி.மீ, கல்லணை 26, நெய்வாசல் தென்பாதி 25.8, திருக்காட்டுப்பள்ளி 25.4, அய்யம்பேட்டை 23, பாபநாசம் 20.2, அதிராம்பட்டினம் 17.6, தஞ்சாவூா் 7, மதுக்கூா் 6, பூதலூா் 5.4, கும்பகோணம், திருவிடைமருதூா் தலா 2.4, மஞ்சளாறு 1.6 மி.மீ.
திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த மழையால், நடுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழை மரங்கள் அடியோடும், பாதியாக முறிந்தும் சாய்ந்தன. இதனால், சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதேபோல, சில இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் விழுந்ததால், மின்சாரம் தடை ஏற்பட்டது.