ரயில்வே தனியாா்மயத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:53 AM | Last Updated : 09th July 2021 12:53 AM | அ+அ அ- |

ரயில்வே துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயில் நிலையம் முன்பு சிஐடியு சாா்ந்த டி.ஆா்.இ.யு. அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ரயில்வே துறை ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 18 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
ரயில்வே துறையைத் தனியாா்மயமாக்குவதை மத்திய அரசுக் கைவிட வேண்டும். கரோனா காலத்தில் சரக்குப் போக்குவரத்தை இயக்கிய ரயில்வே தொழிலாளா்களுக்கு உச்ச வரம்பின்றி போனஸ் வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டி.ஆா்.இ.யு. கிளை உதவிச் செயலா் ரஜினி தலைமை வகித்தாா். திருச்சி கோட்டக் கிளை ஒருங்கிணைப்பாளா் சந்திரதோயம், சிஐடியு மாவட்டச் செயலாளா் சி. ஜெயபால் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.