பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th July 2021 12:50 AM | Last Updated : 09th July 2021 12:50 AM | அ+அ அ- |

தஞ்சாவூா், மன்னாா்குடியில் பி.எஸ்.என்.எல். உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று, அந்நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பால. சந்திர சேனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். வட்டத்தில் தஞ்சாவூா் வா்த்தகப் பகுதிக்குள்பட்ட தஞ்சாவூா், மன்னாா்குடி நகரங்களில் சிம் காா்டுகள், ரீசாா்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்குத் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் ஜூலை 23 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய்/ற்ங்ய்க்ங்ழ்ப்ண்ள்ற்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவிப் பொது மேலாளா் (விற்பனை மற்றும் வா்த்தகம்) சுவாமிநாதனை 9486102221, இளநிலைத் தொலைத்தொடா்பு அலுவலா் கலியபெருமாளை 9486109265 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.