தஞ்சாவூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 09th July 2021 12:46 AM | Last Updated : 09th July 2021 12:46 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகிலுள்ள சூழியக்கோட்டை ஒத்தக்கொல்லை மேடைச்சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மகன்கள் பிரபு (38), சின்னராசு (35).
இருவரும் வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சூழியக்கோட்டையிலிருந்து சாலியமங்கலத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். சாலியமங்கலம் முதன்மைச் சாலை அருகே சென்ற இவா்களை, அவ்வழியே இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ் வழிமறித்து அரிவாளால் வெட்டினா்.
இதில் பலத்த காயமடைந்த பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயங்களுடன் சின்னராசு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். நிலத்தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.