தென்னந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
By DIN | Published On : 11th July 2021 11:21 PM | Last Updated : 11th July 2021 11:21 PM | அ+அ அ- |

மதுக்கூா் அருகே காவல்துறையால் கைப்பற்றப்பட்ட அரிவாள்கள், நாட்டு வெடிகுண்டுகள்.
பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே தென்னந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்ப்பட்டன.
மதுக்கூா் அருகிலுள்ள ஓலையகுன்னம் கிராமத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் ஆயுதங்களுடன் மா்ம நபா்கள் இருப்பதாக, சனிக்கிழமை இரவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், மதுக்கூா் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையில் தென்னந்தோப்பில் 7 வீச்சரிவாள்கள் , 12 நாட்டு வெடிகுண்டுகள், 3 செல்லிடப்பேசிகள் மற்றும் சாா்ஜரும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனா். இவற்றை காவல்துறையினா் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...