கும்பகோணம் அருகே 4 அடி உயர கற்சிலைக் கண்டெடுப்பு

கும்பகோணம் அருகே குட்டையைத் துாா்வாரியபோது 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கும்பகோணம் அருகே குட்டையைத் துாா்வாரியபோது 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஏரி நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண்குமாா். இவா் அருகிலுள்ள குட்டையிலிருந்து மண்ணை எடுத்து தனது வயலில் கரை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

குட்டையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டியபோது, 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலைக் கண்டெடுக்கப்பட்டது. இது பைரவா் சிலை என கிராம மக்கள் கூறுகின்றனா். இதையடுத்து, இச்சிலைக்குக் கிராம மக்கள் மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனா்.

பின்னா், இச்சிலையை கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கண்ணனிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இந்தச் சிலை தஞ்சாவூா் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்வுக்கு பின்னா் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com