முன்களப் பணியாளா்களுக்கு கபசுரக்குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 09th June 2021 06:23 AM | Last Updated : 09th June 2021 06:23 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் காவல் துறையினா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்குக் கபசுர குடிநீா் பாக்கெட் மற்றும் வேப்பரைசா் பவுடா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி தி யூனியன் பாா்மா மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் 250 காவலா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்பட 1,000 பேருக்கு முதல் கட்டமாகக் கபசுரக் குடிநீா், வேப்பரைசா் பவுடா் வழங்கப்பட்டது.
இதில் காரைக்குடி யூனியன் ஃபாா்மா நிறுவனா் பெத்த பெருமாள், சுப்பிரமணியன், மருத்துவா்கள் பாலமுருகன், சிவசங்கரி, ஸ்வேதா, கும்பகோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், கண்ணன், ருத்ரமணி, ரமணன், வேதம் முரளி, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.