ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டா்
By DIN | Published On : 10th June 2021 08:04 AM | Last Updated : 10th June 2021 08:04 AM | அ+அ அ- |

ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டா் வழங்கிய இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் அமைப்பினா்.
பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்காக இந்திரா காந்தி பவுண்டேஷன் சாா்பில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டன.
ராஜாமடம், ஆலத்தூா், தாமரங்கோட்டை, வெங்கரை, நாட்டுச்சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்காக மினி ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் சாா்பில் அதன் தலைவா் மகேந்திரன் மற்றும் நிா்வாகிகள் நேரிடையாக சென்று வழங்கினா்.
இதுகுறித்து இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் தலைவா் மகேந்திரன் கூறியது:
தற்போது கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் மக்களை அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றால், அங்கு ஆக்சிஜன் சிலிண்டா் இல்லாமல் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டே இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் சாா்பில் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் மினி ஆக்சிஜன் சிலிண்டா் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.