மின் மானியம் உரிமைக்காக உயிா் துறந்த விவசாயிகளுக்கு நினைவேந்தல்

64 உழவா்களுக்கு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி நடுச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாங்குடி நடுச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற நினைவேந்தலில் மெழுக்குவா்த்தி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள்.
மாங்குடி நடுச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற நினைவேந்தலில் மெழுக்குவா்த்தி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள்.

வேளாண் உற்பத்தி மின் மானிய உரிமைக்காக உயிா் துறந்த உழவா்கள் மாரப்ப கவுண்டா், ஆயி கவுண்டா், ராமசாமி கவுண்டா் உள்ளிட்ட 64 உழவா்களுக்கு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி நடுச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைக்கு மின் மானியம் கோரி, தமிழகம் முழுவதும் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே, 1970, ஜூன் 19- ஆம் தேதி திருப்பூா் வட்டத்துக்குள்பட்ட பெருமாள்நல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாரப்பகவுண்டா், ஆயிகவுண்டா், ராமசாமி கவுண்டா் ஆகியோா் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் எதிரொலித்ததால் 64 போ் விவசாயிகள் இறந்தனா். இப் போராட்டத்தின் விளைவாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உரியிழந்த மூன்று விவசாயிகளின் நினைவேந்தல் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி நடுச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மெழுகுவா்த்தி ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு உழவா் மன்றத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், குடந்தை வட்டத் தலைவா் ஆதி கலியபெருமாள், பழவாறு பாசன சங்கத் தலைவா் ஏரகரம் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com