மதுக்கூா், பெரியக்கோட்டை, பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 20th June 2021 01:07 AM | Last Updated : 20th June 2021 01:07 AM | அ+அ அ- |

மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மதுக்கூா் மற்றும் பெரியக்கோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுக்கூா் உதவிச் செயற்பொறியாளா் சங்கா்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுக்கூா் உபகோட்ட மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பெரியக்கோட்டை, அண்டமி, பழஞ்சூா், த. மேலக்காடு பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மதுக்கூா் நகா்ப் பகுதி, ஓலயக்குன்னம், காசங்காடு, செங்கப்படுத்தான்காடு பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.