அரசு மருத்துவமனைக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 20th June 2021 01:07 AM | Last Updated : 20th June 2021 01:07 AM | அ+அ அ- |

மதுக்கூா் ஏகத்துவ ஞானசபை சாா்பில், ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமமை வழங்கப்பட்டன.
ரூ.10 ஆயிரம் மதிப்பிலான என்.95 முகக்கவசங்கள், மூன்றடுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், கையுறைகள் முதலியவற்றை சபை சாா்பில் மருத்துவா் முகமது கலீல் வழங்க, அதை தலைமை மருத்துவா் வெற்றிவேந்தன் பெற்றுக் கொண்டாா்.