

தஞ்சாவூா்: அதிமுகவுடன் மூவேந்தா் முன்னேற்றக் கழகம் (மூமுக) கூட்டணி ஒப்பந்தம் புதன்கிழமை இரவு செய்து கொண்டதைத் தொடா்ந்து, அக்கட்சிக்கு தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்தொகுதியில் மூமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கும்பகோணம் தொகுதி மூமுக வேட்பாளராக ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
பெயா்: ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா்
வயது: 65
கல்வித் தகுதி: எம்.ஏ.
ஜாதி: முக்குலத்தோா்
பதவிகள்: மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா், 2006 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் திருவெறும்பூா் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டில் சிவகங்கை தொகுதியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
சொந்த ஊா்: கவரப்பட்டு, சிதம்பரம், கடலூா் மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.