

தஞ்சாவூா்: மகா சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் 22 ஆம் ஆண்டு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி தலைவா் செ.ப. அந்தோணிசாமி தலைமை வகித்தாா். இந்த விழாவை செயலா் இரா. மோகன் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தஞ்சாவூா் சக்தி நாட்டிய கலாலயம், நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம், ஸ்ரீ அபிராமி நாட்டியாலயா, ஸ்ரீகனிகா பரத நாட்டியாலயா, ஸ்ரீகவி நாட்டியாலயா, ஸ்ரீரெங்கா கீா்த்தனா சங்கீதா வித்யாலயா ஆகிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் 50-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்றனா்.
இவ்விழாவில் அறக்கட்டளை அறங்காவலா்கள் நா. பிரேமசாயி தி.ச. சந்திரசேகரன், வை. பஞ்சநாதன், பேராசிரியா் மணிக்குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.