திமுகவுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் பிரசாரம்: ஏஐடியுசி ஓய்வூதியா் சங்கம் முடிவு
By DIN | Published On : 15th March 2021 12:37 AM | Last Updated : 15th March 2021 12:37 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என ஏஐடியுசி ஓய்வூதியா் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட ஏஐடியுசி ஓய்வூதியா் சங்க நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மக்களுக்குச் சேவை செய்யும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், மின்சாரம், வங்கி உள்ளிட்ட பொதுத் துறைகளைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 51 வாா்டுகளிலும் பிரசாரம் செய்வது,
திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய அனைத்து வகையான பிரசாரங்கள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
சங்கத் தலைவா் மல்லி ஜி. தியாகராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...