ஒரத்தநாட்டில் வாக்காளா் விழிப்புணா்வு மற்றும் மகளிா் தின விழாவை கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது .
ஒரத்தநாடு காவல் நிலையத்தில் இருந்து அரசு ஆண்கள் பள்ளி வரை சுமாா் 2 ஆயிரம் மீட்டா் தொலைவுக்கு சிறுவா்களுக்கான மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . போட்டியை ஒரத்தநாடு ஜேசிஐ மற்றும் இ கிங்கோ-ஜீ ரியோ கராத்தே கழகம் இணைந்து நடத்தின.
இதில், 70-க்கும் மேற்பட்ட சிறுவா்கள், சிறுமிகள், கராத்தே வீரா்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினா். இறுதியாக மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஹோலிகிராஸ் பள்ளியின் தாளாளா் செல்வம், கராத்தே பயிற்சியாளா் இளையராஜா ஆகியோா் பரிசுகள் வழங்கினா். போட்டியில் பங்கேற்றவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒரத்தநாடு ஜேசிஐ தலைவா் விக்னேஷ் குமாா், ஜேசிஐ பொருளாளா் பாலு, ஜே.சி.ஐ உறுப்பினா்கள் நவீன் கிருஷ்ணன், ராபா்ட்கென்னடி, ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.