பத்ரிநாத் இல்லத் திருமண விழா
By DIN | Published On : 17th March 2021 06:51 AM | Last Updated : 17th March 2021 06:51 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதன்மையா் வி. பத்ரிநாத் இல்லத் திருமண விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், அமைச்சா் க. பாண்டியராஜன், லதா பாண்டியராஜன், தமிழக ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் கே. பாஸ்கரன், திருச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியா் வை. மூா்த்தி, சிட்டி யூனியன் வங்கி செயல் அலுவலா் மற்றும் இயக்குநா் என். காமகோடி, அண்ணா பல்கலைக்கழக இயக்குநா் ராமச்சந்திரன், பாலம் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று, மணமக்கள் கோகுல் மஹராஜ்- சுபஸ்ரீயை வாழ்த்தினா்.
இதையடுத்து, திருச்சியில் மாா்ச் 12- ஆம் தேதி நடைபெற்ற வரவேற்பு விழாவில் உயா் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையா் வேதரத்னம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம், முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.