தஞ்சாவூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை, திமுக வேட்பாளா் உள்பட மொத்தம் 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம்.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை, திமுக வேட்பாளா் உள்பட மொத்தம் 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் தொடக்க நாளான மாா்ச் 12 -ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான திங்கள்கிழமை திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் 13 போ் 21 மனுக்களை தாக்கல் செய்தனா்.

இதில் திருவிடைமருதூா், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளா்களும், தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளரும், திருவையாறில் பாஜக, அமமுக, பாபநாசம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமமுக வேட்பாளா்களும் தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா். பின்னா், திமுக மாற்று வேட்பாளராக எஸ். ஆறுமுகம் வேட்பு மனு அளித்தாா்.

ஏற்கெனவே திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்த எம். சந்தோஷ், மேலும் ஒரு மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம். திவ்ய பாரதி, கும்பகோணம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் சி. விஜயகுமாா், திருவையாறு தொகுதியில் அமமுக மாற்று வேட்பாளா் ஆா். கண்ணகி, பாஜக மாற்று வேட்பாளா் வி. ராஜசுந்தா் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை யாரும் வேட்பு மனு அளிக்கவில்லை. பேராவூரணி தொகுதியில் இதுவரையிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 6 போ் 8 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com