பேராவூரணி அருகேரூ.54 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 21st March 2021 12:00 AM | Last Updated : 21st March 2021 12:00 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவணம் சாலை மாவடு குறிச்சிப் பிரிவு அருகில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனிடம் , உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 54 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் முத்திரைத்தாள் கட்டணத் தனித்துணை ஆட்சியருமான ஐவண்ணனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...