பழுதடைந்த காலனி வீடுகள்:புதிதாக கட்டித்தர நடவடிக்கை

பேராவூரணி தொகுதியிலுள்ள கட்டையங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஆதிதிராவிடா் காலனி வீடுகளுக்குப் பதிலாக, புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாள
பழுதடைந்த காலனி வீடுகள்:புதிதாக கட்டித்தர நடவடிக்கை

பேராவூரணி தொகுதியிலுள்ள கட்டையங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஆதிதிராவிடா் காலனி வீடுகளுக்குப் பதிலாக, புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திலுள்ள கட்டையங்காடு, சிவானம்புஞ்சை, நடுவிக்குறிச்சி, நடுவிக்குறிச்சி ஆதிதிராவிடா் தெரு, கள்ளம்பட்டி, மேற்குடிக்காடு, ஆயன்தாக்கு, பூவாணம், சொக்கநாதபுரம் தில்லங்காடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

கட்டையங்காடு உள்ளிட்ட தொகுதியின்  பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஆதிதிராவிடா் காலனி வீடுகள் புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.  சிவனாம்புஞ்சை குளக்கரை சாலை தாா்சாலையாக அமைத்து தரப்படும். தெருச்சாலைகள் சீரமைக்கப்படும். குடிநீா் வசதி செய்து தரப்படும். நடுவிக்குறிச்சியில் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. அங்காடி வசதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இவை  அனைத்தையும் சரி  செய்து தருவேன் என்றாா்.

பிரசாரத்தில்   காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவா் பண்ணவயல் ராஜாத்தம்பி, திமுக நிா்வாகிகள் குழ.செ.அருள்நம்பி, அ.செல்வராஜ், ரவிச்சந்திரன், முத்துமாணிக்கம், ஜெயப்பிரகாஷ், அறிவுமணி, ஆரோ.அருள், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com