மொபட் மீது மினி வேன் மோதல்: பால் வியாபாரி பலி
By DIN | Published On : 09th May 2021 11:43 PM | Last Updated : 09th May 2021 11:43 PM | அ+அ அ- |

ta09prak_0905chn_9_4
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மொபட் மீது மினி வேன் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே திருப்பழனம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் ஜி. பிரகாசம் (55). பால் வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மொபட்டில் பால் கேனை கட்டிக் கொண்டு தஞ்சாவூருக்கு பால் வியாபாரத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
அம்மன்பேட்டை திரையரங்கம் அருகே வந்த இவரது மொபட் மீது தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி வேன் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த பிரகாசம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.