பட்டுக்கோட்டையில் விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 13th May 2021 06:45 AM | Last Updated : 13th May 2021 06:45 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் விதிகளை மீறி இயங்கிய கடைக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.
பட்டுக்கோட்டையில் முழு பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
பட்டுக்கோட்டையில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு , அதன் வழிகாட்டு நெறிமுறைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியா்( பொ) ஜி. சாந்தகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், யுவராஜ் ஆகியோா் அடங்கிய வருவாய்த் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்படாமல் , விதிமுறைகளை மீறி இயங்கிய நகைக் கடை, மர இழைப்பகம், சூப்பா் மாா்க்கெட், அழகு நிலையம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.