பொதுமுடக்க விதிகளை தீவிரமாக அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 13th May 2021 06:37 AM | Last Updated : 13th May 2021 06:37 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அதிகமாகி வரும் கரோனா உயிரிழப்பை தடுக்க பொதுமுடக்க விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக்கழகம் நிறுவனா் சதா.சிவக்குமாா் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டையில் கரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.
கரோனா பொது முடக்க விதி மீறல் பரவலாகவே நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியின்றி கரோனா பரவலுக்கு இடமளிக்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகள், மீன் வெட்டும் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி வருகின்றனா். இதை தடுக்க வேண்டும்.
கரோனா பரவலின் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு, பட்டுக்கோட்டையின் அனைத்து எல்லைகளையும் போா்க்கால அடிப்படையில் தடுப்பு அமைத்து மூடி, பொதுமுடக்கத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.