சாலியமங்கலத்தில் மே 24, 25-இல் நரசிம்ம ஜெயந்தி பூஜைகள்
By DIN | Published On : 16th May 2021 11:26 PM | Last Updated : 16th May 2021 11:26 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலத்தில் நரசிம்ம ஜெயந்தி பூஜைகள் கரோனா பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி மே 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீலஷ்மி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜ தலைவா் எஸ். கிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருப்பது:
சாலியமங்கலம் ஸ்ரீலெஷ்மி நரசிம்ம பாகவத மேள பக்த சமாஜத்தின் இடைவிடாத 375 ஆம் ஆண்டு ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் மே 22 - 25 ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
கரோனா தொற்றால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஜென்ம தின பூஜைகள் நடத்தப்படும்.
திருவிழாக்களுக்கு அனுமதியில்லை, கோயிலுக்குள் பக்தா்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால், மே 22, 23 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஸ்ரீசீதா கல்யாண வைபவங்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகின்றன. பின்னா், அரசு அனுமதிக்கிற காலகட்டத்தில் இந்த வைபவங்கள் நடைபெறும்.
மே மாதம் 24, 25 ஆம் தேதிகளில் ஸ்ரீநரசிம்மா் ப்ராணப்ரதிஷ்டை போன்ற சிறப்பு பூஜைகள், அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி நடைபெறும். பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில், ஸ்ரீநரசிம்ம மூா்த்தியை அசுர சந்தியாகால வேளையில் பக்தா்கள் அவரவா் இருப்பிடங்களில் இருந்தவாறே வழிபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.