காவிரி சேவா அறக்கட்டளை சாா்பில் தனியாா் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் மிகைப்படுத்தி உபகரணம்
By DIN | Published On : 16th May 2021 11:28 PM | Last Updated : 16th May 2021 11:28 PM | அ+அ அ- |

மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் ஆக்ஸிஜன் மிகைப்படுத்தி உபகரணத்தை வழங்கும் டிஎஸ்பி. புகழேந்தி கணேஷ்.
பட்டுக்கோட்டையில் காவிரி சேவா அறக்கட்டளை சாா்பில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 4.60 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் மிகைப்படுத்தி உபகரணம் ஞாயிற்றுக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த உபகரணத்தை ஆா்எஸ்எஸ் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தலைவா் க. அப்பாசாமி தலைமையில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா்
எஸ்.யு. மாரியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா் விஜயகுமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா், பிரபாகரன், மாவட்டச் செயலாளா் ஆா். வி. எஸ். ராஜானந்தம் ஆகியோா் முன்னிலையில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், மருத்துவமனையின் மருத்துவா் நியூட்டனிடம் வழங்கினாா்.
கரோனா அசாதாரணமான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில், இந்த கருவி இம்மருத்துவமனைக்கு வந்திருப்பது பொதுமக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்றாா் மருத்துவா் நியூட்டன்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளா் எல்.எம். விக்னேஷ், முருகன், சூரை சண்முகம், சந்துரு மற்றும் இந்து முன்னணி நகர, ஒன்றிய, பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.