450 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது
By DIN | Published On : 19th May 2021 06:44 AM | Last Updated : 19th May 2021 06:44 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக எஸ்.பி. அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.
இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினா் செவ்வாய்க்கிழமை விசாரித்தனா். இதில், நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியா் காலனி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 332 குவாா்டா் மதுபாட்டில்களும், விளாா் சாலை புதா் பகுதியில் 117 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக விளாா் சாலை இந்திரா நகரைச் சோ்ந்த ஆனந்த் (32), தளவாய்ப்பாளையம் மணிகண்டன் (28), பா்மா காலனி ஸ்டீபன் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.