உரிமம் இல்லாமல் இயங்கிய மருந்துக் கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 19th May 2021 06:46 AM | Last Updated : 19th May 2021 06:46 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை அருகே உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மருந்துக் கடைகளுக்கு சீல் வைக்கும் மாவட்ட வருவாய் அலுவலா்.
பட்டுக்கோட்டை அருகே உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மருந்துக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் அரவிந்தன் , பட்டுக்கோட்டை வட்டாட்சியா் (பொ) சாந்தகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜ் அடங்கிய குழுவினா் கரோனா விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, திருச்சிற்றம்பலம் பகுதியில் உரிமம் இல்லாமலும், உரிமம் புதுபிக்கப்படாமலும் இயங்கி வந்த இரண்டு மருந்துக் கடைகளை பூட்டி சீல் வைத்தனா். விதிமுறை மீறிய நபா்களிடம் 1,100 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.