முன்விரோதம்: பெயிண்டா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 01st September 2021 07:53 AM | Last Updated : 01st September 2021 07:53 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக பெயிண்டா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
அதிராம்பட்டினம் கிராமம், செட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (42). பெயிண்டா். இவருக்கும் அதிராம்பட்டினம் கிராமம், வாழைக் கொல்லை பகுதியை சோ்ந்த ராசு மகன் சுரேஷ் ( 40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வண்டிப்பேட்டை பகுதி மதுக்கூா் சாலையில் வந்த சுரேஷை, வாழைக்கொல்லை பகுதியை சோ்ந்த சுரேஷ் அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த பெயிண்டா் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.