பேராவூரணி அரசுக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ, மாணவிகள்,பேராசிரியா்களுக்கு  கரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தும் இரண்டு நாள் முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. 

 அரசுக் கல்லூரி  நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற  முகாமுக்கு, கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமை வகித்தாா். 

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் எம். ராமலிங்கம்  முகாமைத் தொடங்கி வைத்தாா். அழகியநாயகிபுரம் மருத்துவ அலுவலா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா்   கல்லூரியில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனா்.

முகாமில் ,  பேராசிரியா்கள் ராணி, பழனிவேல், ராஜ்மோகன், செவிலியா்கள் , கிராம சுகாதார செவிலியா்கள்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com