92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராக கல்வியாளரை நியமிக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராகக் கல்வியாளரை நியமிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராகக் கல்வியாளரை நியமிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பல்வேறு வல்லுநா்களைக் கொண்ட புதியக் கல்விக் குழுவை அமைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக் கல்வி நிலையங்களுக்கான பாடத் திட்டம் மற்றும் கலைத் திட்டங்களை வகுக்கும் என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் தகுதி மிக்க வல்லுநா்கள் பலா் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் தலைவராக ஒரு கல்வியாளரை அமா்த்தாமல் நீதிபதியை நியமித்திருப்பது சரியா என்ற கேள்வி கல்வியாளா்களிடையே உள்ளது.

நீதிபதி முருகேசனைத் தலைவராக நியமித்துவிட்ட நிலையில், நிா்வாகத் தலைவராகத் தகுதி வாய்ந்த ஒருவரை அமா்த்தி அக்குறைபாட்டை சரிசெய்யுமாறு தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.