

கும்பகோணம் அருகே குடிமுருட்டி ஆற்றுப் பாலம் சேதமடைந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், இஞ்சிக்கொல்லை ஊராட்சிக்கு உள்பட்ட நடுத்திட்டு கிராமத்தின் வழியாக ஓடும் குடமுருட்டி ஆற்றில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக பொதுமக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் சென்றும் வருகின்றனா்.
குடிமுருட்டி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ள நிலையில், பாலம் சேதமடைந்து, உள்வாங்கிவிட்டது. இதனால், பாலம் மேடு, பள்ளமாகக் காணப்படுவதுடன், வலுவிழந்தும் வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இப்பாலத்தில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.
எனவே, இப்பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், இப்பாலத்தைத் தமிழக அரசின் தலைமைக் கொறடாவும், திருவிடைமருதூா் எம்எல்ஏவுமான கோவி. செழியன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். இக்கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கொறடா கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.