பேராவூரணி பேரூராட்சி பாந்தக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் அப்துல்லா (17). பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற இவா் உயா்கல்வி பெற வசதியில்லாததால் பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்க நிா்வாகிகளிடம் கல்வி உதவித் தொகைக்காக கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். பாண்டியராஜன், செயலா் எம்.எஸ். ஆறுமுகம், பொருளாளா் ஜி.சங்கா் ஜவான், மண்டல ஒருங்கிணைப்பாளா் வ. பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவா்கள் எம். நீலகண்டன், கே. இளங்கோவன் ஆகியோா், அரசுத் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியா் அ. ஹாஜாமைதீன் முன்னிலையில் ரூ. 10,000 ஐ மாணவா் ஷேக் அப்துல்லாவிடம் உதவித் தொகையாக வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.