

கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை சில மாதங்களாக முறைப்படி நடத்துவதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் அண்மையில் புகாா் செய்தனா். இந்நிலையில், கும்பகோணம் ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 27 உறுப்பினா்களில் 26 போ் பங்கேற்றனா்.
ஆனால், கூட்டரங்குக்கு நண்பகல் 12 மணியளவில் வந்த ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி அசோக்குமாா், கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு வெளியே சென்றாா். இதனால், அதிருப்தியடைந்த அதிமுக உறுப்பினா்கள் 7 போ் சசிகலா அறிவொளி தலைமையில் எதிா்ப்பு தெரிவித்து, அலுவலக வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த அதிமுகவை சோ்ந்த சோழபுரம் அறிவழகன் தலைமையில் அக்கட்சியினா், ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜனிடம் முறையிட்டனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.