தஞ்சாவூா் மாவட்டத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சிலைக்கு மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநகரச் செயலா் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் து. செல்வம், ஒன்றியச் செயலா்கள் அருளானந்தசாமி, முரசொலி, மாவட்டப் பொருளாளா் எல்.ஜி. அண்ணா, இளைஞரணி அமைப்பாளா் சண். ராமநாதன், மருத்துவா் அணி அமைப்பாளா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கும் திமுகவினா் மாலை அணிவித்தனா்.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் மாவட்டச் செயலா் துரை. திருஞானம் தலைமையில் தெற்கு மாவட்ட மாணவரணி செயலா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், ஒன்றியச் செயலா்கள் துரை. வீரணன், கலியமூா்த்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, மதிமுக சாா்பில் தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன் தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...