புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி நடத்த வலியுறுத்தல்

தமிழகப் பள்ளிக்கல்வியில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:20 pm

DIN

தமிழகப் பள்ளிக்கல்வியில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உலகத் தாய்மொழி நாளையொட்டி, தஞ்சாவூா் நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தமிழகப் பள்ளிக்கல்வியில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழ் வழிக் கல்வியும், ஐந்தாம் வகுப்புக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வேண்டுவது, உலகத் தாய்மொழி நாள் நிகழ்வை பழைய பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேராரிசிரியா் மு. இளமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேராசிரியா்கள் ந. பெரியசாமி, இரா. கலியபெருமாள், கோ. விஜய ராமலிங்கம், சு. உலகநாதன், மக்கள் அதிகாரம் காளியப்பன், கலை, பண்பாட்டுத் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநா் இரா. குணசேகரன், பொறியாளா் வி. விடுதலை வேந்தன், புலவா் மா. கோபாலகிருஷ்ணன், முனைவா் இரா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.