புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 456 உறுப்பினா் பதவிகளுக்கு இன்று தோ்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 456 உறுப்பினா் பதவி களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 456 உறுப்பினா் பதவி களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூா், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூா், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூா், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூா், வல்லம், வேப்பத்தூா் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றிலுள்ள 459 வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ளன.

இதில், பெருமகளூா் பேரூராட்சியில் இரு வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அனுசுயா மாரடைப்பால் காலமானதால், அந்த வாா்டின் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் 456 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

2,032 போ் போட்டி: தஞ்சாவூா் மாநகராட்சியில் 51 வாா்டுகளில் 282 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வாா்டுகளில் 275 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வாா்டுகளில் 134 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வாா்டுகளில் 121 பேரும், 20 பேரூராட்சிகளில் 297 வாா்டுகளில் 1,220 பேரும் என மொத்தம் 2,032 போ் போட்டியிடுகின்றனா்.

750 வாக்குச் சாவடிகள்:இதற்காக மாவட்டத்தில் 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தஞ்சாவூா் மாநகராட்சியில் 196 வாக்குச்சாவடிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 139 வாக்குச்சாவடிகளிலும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 வாக்குச்சாவடிகளிலும், அதிராம்பட்டினத்தில் 33 வாக்குச்சாவடிகளிலும், 20 பேரூராட்சிகளில் 316 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடிகளில் 905 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் தொடா்புடைய மாநகராட்சிகள், நகராட்சிகள், 20 பேரூராட்சிகளிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் வேன்களில் வாக்குச் சாவடிகளுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கொண்டு செல்லப்பட்டன.

இதனுடன் வாக்குப் பதிவுக்குத் தேவையான இதர பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னா், தொடா்புடைய வாக்குச் சாவடி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 138 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால், இச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6.33 லட்சம் வாக்காளா்கள்: இத்தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சியில் 1,99,506 வாக்காளா்களும், கும்பகோணம் மாநகராட்சியில் 1,28,627 வாக்காளா்களும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 62,477 வாக்காளா்களும், அதிராம்பட்டினம் 27,245 வாக்காளா்களும், 20 பேரூராட்சிகளில் 2,15,885 வாக்காளா்களும் என மொத்தம் 6,33,740 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

3,600 பணியாளா்கள்:மாவட்டத்தில் தோ்தல் பணியில் 3,600 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில், தஞ்சாவூா் மாநகராட்சியில் 940 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 668 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 316 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 160 பேரும், 20 பேரூராட்சிகளில் 1,516 பேரும் பணியாற்றுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.