புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கல்லணைக் கால்வாய், வடவாற்றில் புதிய பாலங்கள்மாற்றுப் பாதையில் போக்குவரத்து இயக்க ஆலோசனை

தஞ்சாவூா் கல்லணைக் கால்வாய், வடவாற்றில் ரூ. 6 கோடி மதிப்பில் புதிதாகப் பாலங்கள் கட்டப்படவுள்ளதால், மாற்றுப் பாதையில் போக்குவரத்து இயக்குவது குறித்து வியாழக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:12 pm

DIN

தஞ்சாவூா் கல்லணைக் கால்வாய், வடவாற்றில் ரூ. 6 கோடி மதிப்பில் புதிதாகப் பாலங்கள் கட்டப்படவுள்ளதால், மாற்றுப் பாதையில் போக்குவரத்து இயக்குவது குறித்து வியாழக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

தஞ்சாவூா் கரந்தை போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வடவாறு பாலம் உள்ளது. மிகவும் பழைமையான இப்பாலம் சிதிலமடைந்து காணப்படுவதால், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது.

இதேபோல, தஞ்சாவூா் காந்திஜி சாலையில் கல்லணைக் கால்வாயிலுள்ள இா்வீன் பாலமும் பழுதடைந்துவிட்டதால், புதிய பாலம் கட்டப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் ரூ. 6 கோடி மதிப்பில் 4 பாலங்கள் கட்டப்படவுள்ளன.

நான்கு வழிச் சாலையைக் கருத்தில் கொண்டு கல்லணைக் கால்வாய் பகுதியில் 37 மீட்டா் நீளத்தில் 2 பாலங்களும், வடவாற்றில் 27 மீட்டா் நீளத்தில் 2 பாலங்களும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாலமும் தலா ஒன்றரை கோடி ரூபாயில் கட்டப்படுகின்றன. இந்தப் பாலத்தில் நடைபாதையும் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டப்படும் இந்தப் பாலப் பணிகள் அனைத்தும் மாா்ச் மாதத்தில் தொடங்கப்பட்டு 3 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, மாற்றுப் பாதையில் போக்குவரத்து இயக்குவது தொடா்பாகக் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், நெடுஞ்சாலைத் துறைக் கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் மு. ரஞ்சித், வட்டாட்சியா் கே. மணிகண்டன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் க. கபிலன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், கும்பகோணம் சாலை மற்றும் திருவையாறு சாலையில் இருந்து வரும் நகரப் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை, வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலை, ஏ.ஓய்.ஏ. நாடாா் சாலை, கொடிமரத்து மூலை வழியாகத் தஞ்சாவூருக்கு வந்து, செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல, சென்னை மற்றும் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வரும் புகரப் பேருந்துகள் பள்ளியக்ரகாரம் புறவழிச்சாலை ரவுண்டானாவில் இருந்து மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை, தொல்காப்பியா் சதுக்கம் வழியாக தஞ்சாவூா் மாநகருக்குள் வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

காந்திஜி சாலையில் அண்ணா சிலை அருகிலிருந்து இா்வீன் பாலம் வரை போக்குவரத்துக்குத் தடை விதித்து, வாகனங்கள் அனைத்தும் பழைய நீதிமன்றச் சாலை, பெரியகோவில், சோழன்சிலை வழியாக வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதையொட்டி மாநகராட்சிக்குட்பட்ட ஏ.ஓய்.ஏ. நாடாா் சாலை, வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையில் புதிய தாா் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.