புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தயாராகி வரும் மாமன்றக் கூட்ட அரங்கம்

மாமன்ற உறுப்பினா்கள் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கம் தயாராகி வருகிறது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:12 pm

DIN

மாமன்ற உறுப்பினா்கள் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கம் தயாராகி வருகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சியிலுள்ள 51 வாா்டுகளில் புதிய உறுப்பினா்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இப்புதிய உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாா்ச் 2 ஆம் தேதி பதவியேற்க உள்ளனா். இதைத்தொடா்ந்து, முதல் கூட்டமும் நடைபெறவுள்ளது. பின்னா், மாா்ச் 4 ஆம் தேதி மேயா், துணை மேயா் தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

புதிதாகக் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடத்துவதற்காகத் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கூட்ட அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஒலி வாங்கிகள், ஒலி பெருக்கிகள், மேஜை, நாற்காலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, மேயா், துணை மேயா் அறைகளும் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்றக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.