புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:13 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற சரவண ஆறுமுக முதலியாா், சேதுராமன் கிருட்டிணசாமி, திருமுருக கிருபானந்த வாரியாா், க.பொ. இரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகள் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் கடந்த 10 நாள்களுக்கு முன் இலவச பயிற்சி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தோ்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பயிற்சியில் சேர மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பில் இனி வருங்காலங்களில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் பல்வேறு திறமையான ஆசிரியா்கள் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். எனவே, மாணவ, மாணவிகள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்.

தோ்வுகள் வருவதற்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். ஆசிரியா்கள் தங்களுடைய பணிகளைச் செய்கின்றனா். இதேபோல, மாணவ, மாணவிகளும் போட்டித் தோ்வுக்குத் தயாராகி வெற்றி பெற வாழ்த்துகள் என்றாா் துணைவேந்தா்.

மொழிப்புல முதன்மையா் இரா. காமராசு வாழ்த்துரையாற்றினாா். திருமுறை நெறியில் வாரியாா் சுவாமிகள் என்ற தலைப்பில் மதுரை இயல் இசை நாடகக் கலைஞா் ஷேக் சாகுல் உறமீது (எ) ராஜாமுகமது சிறப்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் தி. பாா்த்திபன் இணைப்புரையாற்றினாா்.

முன்னதாக, மெய்யியல் துறை உதவிப் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் பொ. சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.