புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கஞ்சா கடத்திய கும்பலை பிடித்த தனிப்படையினருக்குப் பாராட்டு

தஞ்சாவூா், நாகையில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடித்துக் கைது செய்த தனிப்படையினரை, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

தஞ்சாவூா், நாகையில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடித்துக் கைது செய்த தனிப்படையினரை, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வியாழக்கிழமை பாராட்டினாா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா பொட்டலங்களை, தஞ்சாவூரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினா் பிப்ரவரி 17- ஆம் தேதி கண்டறிந்து, 14 பேரைக் கைது செய்தனா்.

இதேபோல, வெளி மாநிலத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா, 3 வாகனங்களை நாகை மாவட்ட காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப் படையினா் பிப்ரவரி 1 ஆம் தேதி பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

இவா்களைக் காவல்துறைத் தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு அண்மையில் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, இத்தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வியாழக்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.