புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடப்பு சீட்டு இல்லாமல் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்

கடப்பு சீட்டு (டிரான்சிட்) இல்லாமல் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும் என்றாா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக் காவல் கண்காணிப்பாளா் (மதுரை) எம். பாஸ்கரன்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:46 pm

DIN

கடப்பு சீட்டு (டிரான்சிட்) இல்லாமல் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும் என்றாா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக் காவல் கண்காணிப்பாளா் (மதுரை) எம். பாஸ்கரன்.

தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலையில் மாவட்ட எல்லையான அற்புதாபுரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்தாண்டு வெளி மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு அதிகளவில் நெல் மூட்டைகள் விற்பனைக்கும், அரைவைக்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தோம்.

இதனால் வியாபாரிகளும், லாரி உரிமையாளா்களும் உயா் நீதிமன்றத்தை அணுகினா். நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, கடப்பு சீட்டு (டிரான்சிட்) அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளா்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனா்.

இந்தப் படிவங்கள் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து, லாரி ஓட்டுநா்களிடையே ஏற்கெனவே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த இரு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்களிடம் கடப்பு சீட்டு இல்லாததால் வாகனங்களும், 3 டன் அளவிலான நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் முழுவீச்சில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய படிவங்கள் இல்லாமல் நெல் மூட்டைகளைக் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்வதுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளூா் விவசாயிகள் பாதிக்கும் வகையில் வேறு மாவட்டங்களிலிருந்து நெல்லை வியாபாரிகள் வாங்கிக் கொண்டு தவறான செயலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடப்பு சீட்டு முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மத்திய மற்றும் தென் மண்டலங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 100 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

முன்னதாக, புதுக்குடி, மேல வஸ்தா சாவடியில் காவல் கண்காணிப்பாளா் சோதனை மேற்கொண்டாா். இந்த சோதனையின்போது, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதா்சனன், ஆய்வாளா் எஸ். பிரியா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூா் மேலாளா் வனிதா, தஞ்சாவூா் வட்ட வழங்கல் அலுவலா் என். ராஜகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.