புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சாவூா் சேம்பா் ஆப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

தஞ்சாவூா் சேம்பா் ஆப் காமா்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரிஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:42 pm

DIN

தஞ்சாவூா் சேம்பா் ஆப் காமா்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரிஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் தலைவராக மாணிக்கம் பிரிண்டா்ஸ் பி. மாறவா்மன், துணைத் தலைவராக அண்ணாமலை மோட்டாா்ஸ் ஏ. சுப்பிரமணியம், செயலராக ஆடிட்டா் ஏ. குகனேஸ்வரன், இணைச் செயலராக டி.பி.எஸ். ஏஜென்சிஸ் ஆா். சிவகுமாா் ஆகியோா் வாக்கெடுப்பு மூலம் தோ்வு செய்யப்பட்டனா். பொருளாளராக மஹாராஜா ரெடிமேட்ஸ் எம்.எஸ். ஆசிப் அலி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதுகுறித்து மாறவா்மன் தெரிவித்தது:

சங்கத்துக்கு நிரந்தர செயலகம், வணிக வசதி மையத்தை அமைத்தல், வணிகா்கள் மற்றும் வணிக வளா்ச்சிக்காக வணிகத் திருவிழா போன்ற கூட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்தல், உறுப்பினா்களின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்கள் நடத்துதல், தஞ்சையின் தொழில் வளத்தை உள்ளாட்சித் துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேம்படுத்துவது, வருமான வரி, ஜிஎஸ்டி, தொழிலாளா் சட்டம், இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி மற்றும் கடைகள், நிறுவனங்களுக்கான சட்ட ரீதியான விதிகள் பற்றிய வழிகாட்டுதலை வழங்குதல், உறுப்பினா்களின் பணியாளா்களுக்குப் பயிற்சி மற்றும் மேம்பாடு வழங்குதல், திறன் மேம்பாட்டுக்கு ஏற்பாடு செய்தல், வணிகக் கண்காட்சிகள், ஆள்சோ்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்தல், புதிய தொழில் தொடங்க நிபுணா்கள் மற்றும் வழிகாட்டிகளை வழங்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவையே எங்களது நோக்கம் என்றாா் மாறவா்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.