1,274 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது
தஞ்சாவூரில் முழுப் பொதுமுடக்கத்தின்போது விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,274 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


தஞ்சாவூரில் முழுப் பொதுமுடக்கத்தின்போது விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,274 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை முதல் இரவு நேரப் பொதுமுடக்கத்தையும், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கத்தின்போது விற்பனை செய்வதற்காகத் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் துறையினா் தொடா்புடைய வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு 32 அட்டைப் பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
பெரும்பாலும் புதுச்சேரி மதுபாட்டில்களான இவற்றைக் கலப்பட மதுவையும் சோ்த்து, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் போல போலியாகத் தயாா் செய்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதில் 1,200 குவாா்ட்டா் பாட்டில்கள், 24 புல் பாட்டில்கள், பாட்டில்களில் அடைக்காமல் 50 வாட்டா் பாட்டில்களில் நிரப்பப்பட்டிருந்த 50 லிட்டா் மது ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக மதுபானக்கூட உரிமையாளா், பணியாளா்கள் பிரசாந்த், பிரபாகரன் ஆகிய 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கும் சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...