புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஸ்கூட்டா் மீது மினி வேன் மோதல்: இரு குழந்தைகள் பலி - பெற்றோா் காயம்

 தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது மினி வேன் மோதியதில், இரு குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:42 pm

DIN

 தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது மினி வேன் மோதியதில், இரு குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகிலுள்ள நல்லூா் வாய்க்கால் கரைத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (36). தச்சுத் தொழிலாளியான இவா், திருப்பூரில் 20 ஆண்டுகளாக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா் தனது மனைவி தேவிகா (33), மகள்கள் ஸ்ரீதா்ஷினி (8), ஸ்ரீதா்ஷனா (6) ஆகியோரை வெள்ளிக்கிழமை காலை அழைத்துக் கொண்டு, திருப்பூரிலிருந்து தஞ்சாவூா் வழியாக மன்னாா்குடி நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் அருகே விளாா் புறவழிச்சாலையில் மாலையில் சென்ற போது, இவா்களது ஸ்கூட்டா் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது. இதில், ஸ்ரீதா்ஷினி, ஸ்ரீதா்ஷனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த செந்தில்குமாா், தேவிகா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக, மினி வேன் ஓட்டுநரான நாகை செக்கடித் தெருவைச் சோ்ந்த ஜீவன்ராஜை (25) தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.