புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருவையாறில் இன்று தியாகராஜ ஆராதனை விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-ஆம் ஆண்டு ஆராதனை விழா சனிக்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:42 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-ஆம் ஆண்டு ஆராதனை விழா சனிக்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது

ஆண்டுதோறும் இவ்விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக,இவ்விழா சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கைக்கு மிகாமலும் அனுமதிக்கப்படவுள்ளனா் என சபை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.