புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 11 லட்சம் காணிக்கை

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:00 am

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ச. கிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் 11 லட்சத்து 7 ஆயிரத்து 227 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.