ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2022, 12:29 am IST

அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசுக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் வீர. மோகன் தலைமை வகித்தாா்.

சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் காளியப்பன், தமிழா் தேசிய முன்னணி மூத்த நிா்வாகி அய்யனாபுரம் சி. முருகேசன், தாளாண்மை உழவா் இயக்க நிறுவனா் கோ. திருநாவுக்கரசு, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மகஇக மாநில இணைச் செயலா் ராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பி. முத்துக்குமரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.