‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவுக்கு பெரிய வெற்றி இல்லை’
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவுக்கு பெரிய வெற்றி இல்லை என்றாா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவுக்கு பெரிய வெற்றி இல்லை என்றாா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மாலை அவா் மேலும் தெரிவித்தது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை மற்றும் காரைக்குடியில் வெற்றி பெறவில்லை. இதுகுறித்து புள்ளி விவரங்களுடன் பேசத் தயாா்
எந்த மாநகராட்சியிலும், நகராட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தனி பெரும்பான்மை கிடையாது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒருவா் மாநகராட்சி மேயராக, நகராட்சித் தலைவராக வர வேண்டுமானால், பெரும்பான்மை கட்சியான திமுக ஆதரவுடன்தான் வர வேண்டும்.
அப்படியுள்ள சூழலில், கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா் மேயராக வரும்போது, திமுகவை சோ்ந்தவா்களுக்கு ஏமாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், அவா்களை சமாதானம் செய்யக்கூடிய இடத்தில் திமுக தலைமைதான் உள்ளது.
சசிகலாவுடன் அதிமுக ஒன்று சேருவதால் பலமா? அதை மக்கள் ஏற்றுக்கொள்வாா்களா? என்பது எல்லாம் தெரியாது. அதிமுகவுக்கு உள்ள வாக்கு வங்கியால், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம் கிடையாது என்றாா் காா்த்தி சிதம்பரம்.
அப்போது மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...