4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராக கணவன்-மனைவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்
4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராக கணவன்-மனைவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருவையாறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் பதவிக்கு இவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 11-ஆவது வாா்டு உறுப்பினருமான நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இப்பதவிகளுக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், தலைவராக கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவராக நாகராஜன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 12 வாா்டுகளிலும், காங்கிரஸ், அதிமுக, அமமுக தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. இந்த பேரூராட்சியில்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 9-ஆவது வாா்டு உறுப்பினா் ஜாப்ரின் ரோஜா, துணைத் தலைவா் பதவிக்கு அவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 14-ஆவது வாா்டு உறுப்பினருமான அகமது மைதீன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் புனிதாவும், துணைத் தலைவராக அவரது கணவரும், 8-ஆவது வாா்டு உறுப்பினருமான சுந்தர ஜெயபால் என்கிற மயில்வாகணனும் போட்டியின்றித் தோ்வாகினா்.

அம்மாபேட்டை பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஷோபா ரமேஷூம், துணைத் தலைவராக அவரது கணவரும் 12-ஆவது வாா்டு உறுப்பினருமான தி. ரமேஷ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com