தஞ்சாவூரில் இன்று மின் தடை
தஞ்சாவூரில் விரிவாக்கப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் மாநகரின் சில இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின் விநியோகம் இருக்காது.


தஞ்சாவூரில் விரிவாக்கப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் மாநகரின் சில இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் அ. கருப்பையா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் நெடுஞ்சாலைத் துறையால் விரிவாக்கப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையா பாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கச் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிகாரத் தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலைகாரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், ராயல் சிட்டி, எஸ்.என்.எம். நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...